அச்சம் ஒதுக்கு

சண்டை
தீவிரவாதம்.
பிடிவாதம் .....
அதனால்
வரும் இழப்புகள்...

ஆசையில்
அறியாமையில்
முளைத்து,

பாதுகாப்பின்மை
எண்ணத்தில்
விளைந்து ,

அச்சம்
உச்சமாகும்போது
தோன்றுகிறது ....

"நீயா? ..இல்லை ...நானா ? என்பது.



மகிழ்வான நினைவுக்குள்ளும்,
அன்பான உறவுகளுக்குள்ளும்,
பண்பான நட்புகளுக்குள்ளும் ,
இன்பங்கள் விளைவது ....

'நீயும்
நானும்
நாமும் ...
எனும்போதுதான்.'

எழுதியவர் : மின்கவி (2-May-14, 10:09 pm)
பார்வை : 93

மேலே