நட்பு
இணையில்லா இன்பத்தை என்றும் சுமந்து வரும்..
இரவாய் பகலாய் இதனுடன் இன்னொரு இயற்கையாய் தொடர்ந்து வரும்....
உலகம் உயர்த்திப் போற்றையில் மட்டும்
உறவுகள் என்னை நாடி வரும்...
சில உதடுகள் என்னை தூற்றையிலே
உள்ளம் பதறிஉரிமையுடன் இவையே ஓடிவரும்...
என்றும் வேதனை தவிர்த்து..
வெற்றி மாலை தரும் இன்ப வேளை தரும்...
இணையில்லா இறைவனும் இருப்பிட வரம் கேட்டு
ஏங்கி நிற்கும் நிலையே...
என்றும் சிறந்த எந்தன் நட்பு...!!!!!