அடுத்தது

பார்க்க பெற்றோர் இல்லாமல்
படிக்க வசதி இல்லாமல்
படுக்க இடம் இல்லாமல்
ஒரு ஐந்து வயது சிறுவனின்
மனது அலைந்து கொண்டிருந்த
வேளையில் ஒரு குப்பைத்தொட்டி
கண்ணில்பட்டது அதன் அருகில்
செல்லச் செல்ல இதிலென்ன
இருக்கும் என்று இதயம் படபடக்க
மனது துடிதுடிக்க அதன்
அருகினில் சென்றான் அந்த
தொட்டியின் மேல் கைவைத்து
எட்டிப் பார்த்தன் இலையில்
கொஞ்சம் சோறு சாம்பார் சிதறிக்
கிடந்தது அதை எடுக்க கைவிட்டான்
எட்டவில்லை உள்ளே சென்றான்
அதை திருப்தியாக சாப்பிட்டுவிட்டு
மனது நினைத்தது................

அடுத்தது எந்தக் குப்பைத் தொட்டி என்று.......


தனா - வின் சிலவரிகள்

எழுதியவர் : தனா (3-May-14, 2:16 pm)
Tanglish : atuthathu
பார்வை : 138

மேலே