வேண்டுவன

அமைதியான வாழ்க்கை
அழகான குடும்பம்

திணிக்கப்படாத பாடம்
முதல் வகுப்புத் தேர்ச்சியில் பட்டம்

ஆதரவு தர தோழர்கள்
ஆறுதல் சொல்ல தோழிகள்

நண்பனை போல் ஆசிரியர்
ஆசிரியரைப் போல் ஒரு நண்பன்

என்னை விரும்பும் ஓர் இதயம்
அவள் பிரிந்துச் சென்றாலும் தாங்கும் இதயம்

கையளவு துன்பம்
கடலளவு இன்பம்

சுயமான சிந்தனை
மூத்தோர்களின் போதனை

கடன் வாங்கா மனம்
தானம் செய்யும் குணம்

திறமைக்கேற்ற வேலை
வேலைக்கேற்ற ஊதியம்

தாய்மை அன்பில் தாரம்
அவள் வயிற்றில் தாய்மை பாரம்

சொல்லிக்கொள்ள மகள்
சொல்லிக்கொள்ளவும்
கொள்ளி இடவும் மகன்

இனிமை உள்ள இளமை
தனிமை இல்லா முதுமை

வாழும் போது
வாழ்க்கையில் சொர்க்கம்
வாழ்ந்த பிறகு
சொர்க்கத்தில் வாழ்க்கை

எழுதியவர் : (3-May-14, 3:14 pm)
சேர்த்தது : அன்பரசு
Tanglish : venduvana
பார்வை : 85

மேலே