நான்

சுட்டெரிக்கும் வெயில்
தோள்கள் வறண்டு மயிர்கள்
பொசிங்கி மணக்கின்றது
நான் எந்ததப்பும் செய்யவில்லை
அடைக்கப்பட்ட அறைக்குள்
நான் .....

நரக வேதனை ஈ களின் சத்தம்
கேட்டு காதுகள் பழுத்துவிட்டது
இவர்கள் தரும் சாப்பாடு பிடிக்கவில்லை
இருந்தும் பழகிபோயிற்று
நா மறுத்துவிட்டது (சிலபேர்களது )

இவர்களுக்கு கோபம் வரும்போதெல்லாம்
என் உடம்பில் விளையாடுவார்கள்
எங்கு பார்த்தாலும்
வரிக்குதிரை போல் தழும்புகள் உடலில்
என்ன செய்வதென்று தெரியவில்லை

எழுதியவர் : தேகதாஸ் (3-May-14, 3:55 pm)
சேர்த்தது : தேகதாஸ்
Tanglish : naan
பார்வை : 77

மேலே