மாங்கல்யம் தந்துனானே
இரு மனங்கள்
திருமணத்தில் இனைந்து
பெரும் மணம் நறுமணம் !!
ஆனால் இன்றைய சூழ்நிலை ...
நீயா! நானா !
பட்டிமன்றத்தில்
விவாதங்கள் !
நடுவர் பதவியில்
குழந்தை செல்வங்கள் !
விவாதம்
விவாகரத்திலும்
திருமணம்
மறு மணத்திலும் முடியும்
சூழ்நிலையில்
அன்பு செல்வங்களின்
அழகான தீர்ப்பு !
அகத்தை விட்டொழியுங்கள் !
அன்பை வெளிப்படுத்துங்கள் !
ஆல மரமாய் விழுதிடுங்கள் !
ஆனந்தமாய் வாழ்வோம் !