கவலையா ஆமாங்க ஆமாம்
வலை வீசி
பிடிக்கப்படும்
மீன்கள் ...
சந்தோசத்தை
களவாடும்
கள்வன் ..
நேரத்தை
குறைத்து காட்டும்
கடிகாரம் ......
நடக்காததை
நடந்து விடுமோ என்ற
அவ நம்பிக்கைக்காரன் .....
இன்றைய கவலை
நாளை
நேற்றாகிவிடும் !
கவலையால்
கணிதத்தை
தீர்க்க முடியாது !
சந்தோஷ எண்ணங்கள்
விலை கொடுத்து
வாங்குபவர்கள் கட்டும் வட்டி ..!
சந்தோஷ எண்ணங்களை
வங்கியில் சேமிப்போம் !
கவலை தரும் எண்ணங்களை
செலவழிப்போம் !
காயங்களை மறப்போம்
காலங்களை நேசிப்போம்
நம்பிக்கை எனும்
பாதையில்
நலமாய் நடை போடுவோம் !