கோடை வெம்மை

கத்திரி வெய்யில்
தகிக்கும் வேளை
தேர்வு முடிவு
தேர்தல் முடிவு
உஷ்ணம் உயரும்
தமிழக களத்தில் ......!
இத்தனை வெம்மை
எத்தனை கொடுமை
கடல் மட்டம் உயர்த்தி
கண்ணீர் மட்டம் பெருக்கிடுமோ
தோல்வியில் சிக்கும்
அரசியல்வாதிக்கும் மாணவனுக்கும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (3-May-14, 8:17 pm)
பார்வை : 78

மேலே