பிடித்தது-பிடிக்காதது

நம்பிக்கையான நண்பனை பிடிக்கும்
நடிக்கும் நண்பனை பிடிக்காது

பிறர் மனம் திருட பிடிக்கும்
பிறர் மானம் திருட பிடிக்காது

பெண்களின் புன்னகை பிடிக்கும்
கேலியாக சிரிக்கும் புண் நகை பிடிக்காது

புதிய புத்தகம் புரட்ட பிடிக்கும்
புத்தகத்தில் புதைந்து போக பிடிக்காது

காமம் கடந்த வாழ்க்கை பிடிக்கும்
காமம் வெறுத்த வாழ்க்கை பிடிக்காது

மக்களில் மனசுள்ள மனிதரை பிடிக்கும்
மனித உருவம் கொண்ட மாக்களை பிடிக்காது

சுயமாக வாழ பிடிக்கும்
சுயநலமாக வாழ பிடிக்காது -மொத்தத்தில்
நான் நானாக வாழ பிடிக்கும்
நான் மட்டும் வாழ பிடிக்காது .

எழுதியவர் : விகடகவியரசு (4-May-14, 12:01 am)
சேர்த்தது : KAVIYARASU K
பார்வை : 116

மேலே