தோழி நீ எங்கே
என் இனிய தோழியே
எங்கு நீ சென்றாயோ?
எந்தன் கனவிலே
நிதம் வந்து நின்றாயே
நிஜத்தில் எங்கோ
சென்று மறைந்தாயே
எண்ணத்தில் நாம்
சேர்ந்திருந்த நேரங்கள்
வந்து அலைகழிக்கின்றதே
நெஞ்சத்தில் நாம் பார்த்திருந்த
திரைப்படங்கள் கதை, கதைக்கின்றதே
நான் உந்தன் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கின்றேன்
அனுதினமும் ஒரு நொடியேனும்
உன்னை நினைக்கின்றேன்
நீ எனை என்றேனும் நினைப்பாயோ? யோசிக்கின்றேன்