வானம்
வானத்து தாரகைகள்
பள, பளக்க
வையத்து நீர் அருவிகள்
சல, சலக்க
உலகத்து மக்கள் இவற்றை
கண்டு, மனம் வியக்க
எண்ணத்து அலைகள்
நில்லாமல் எங்கெங்கோ பறக்க
அதில் ஒரு வினா,
என்றென்றும் நீடிக்க
வாழ்க்கை ஓடுகின்றது,
அதன் பாட்டிலே
வினாக்கள் தொடர்கின்றது,
அதன் போக்கிலே