கேழ்வரகில் நெய்..!!!
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை..!!
கரை இட்டு பிரிந்தான் மனிதன்..!
நல்ல வண்டி...பார்க்க அழகு.
முன்னே பறந்தது, புதிய கொடி..!
"நம் கண்களில் மிரட்சி..!!"
முன்னே சென்றவர் வாகனம்,
பின்னே சென்றவர் இடித்தார்..!
"விளைந்தது கட்சி மோதல்..!!"
பொண்ணு அழகா இருக்கா..
எதிர் கட்ச்சிக்கு வேண்டிய குடும்பம்..!
"இது இல்லன்னா ஆயிரம் பொண்ணு..
விடுங்க தம்பி..!!!"
மனைவிக்கு உடல் நிலை சரியில்லை..,
சொந்த ஊருக்கு மாற்றல்..!
"எங்க கட்சியில சேந்துடுங்க..!!!"
மக்கள் தொகை ஆயிரம்..
கட்சிகள் பத்து..!!
பத்தும் சேர்த்தது தொண்ணூறு..!!!
மிச்சம் நூறு..!!
நூறில் இறந்தும் உயிருடன் பத்து..!
படித்தது அறுபது..!
முகவரி மாற்றி அலைவது இருபது..!
விரக்தியாய் பத்து..!!
வாக்காளன் இங்கே இரண்டாய் - பிளந்தான்.!!
கட்சிக்காரர் என்றும், மக்கள் என்றும்..!!
தேர்தல் வந்தது..!!
இன்னும் நடக்கவில்லை..!!
முடிவுகள் தெரிந்தன பத்து கட்சிகளுக்கு மட்டும்..!
யாருக்கு தேர்தல்..??
செலவுக்கணக்கு மட்டும் -கோடிகள் ஆயிரத்தில்..!!