அனாதை

தென்றலுக்கு கோபம் வந்ததால்
தீயாக மாறி விட்டதோ?

தெய்வத்திற்கு கோபம் வந்ததால்
என்னை கை விட்டு விட்டதோ?

தெருவில் வாழும் சிறுவனான
நான் அன்பிற்கு எங்கு செல்வதோ?

ஒவ்வொரு நாளும் எழுந்த உடன்,
மனதில் உதிக்கும் ஒரு கேள்வி,
இன்று உணவு கிடைக்குமா?

நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு
கோயிலாய் அலைந்து திரிகின்றேன்,
பிரசாதத்தில் வயிற்றை நிரப்பவே

தெய்வங்களுக்கென ஆயிரம்
கோயில் கட்டும் மனிதரே

எம் போன்ற குழந்தைகளுக்கென
நூறு வாசம் அமைத்து தந்தால்,
கோடி கோயில் கட்டிய புண்ணியம்
வந்து சேரும் உங்களையே

கோட்டை கட்டி ஆண்ட அரசர்கள்,
பல கோயில் கட்டி வைத்து சென்றார்கள்

கோயில் இருந்து என்ன பயன்,
சிலையாக நிற்கும் சாமிக்கு

நிலையாக வாழ ஒரு இடம்
இல்லாமல் நாங்கள் இங்கு
தவிக்கையிலே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (4-May-14, 7:31 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : anaadhai
பார்வை : 51

மேலே