சிந்தித்துச் செயல்படுங்கள்
புதுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதோ பின்னால் பாருங்கள் என்றார். கூட்டத் திலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கு எந்தக் காட்சியும் தென்படவில்லை.
உடனே புரட்சிக்கவிஞர், இப்படி யார் எதைச் சொன்னாலும் அவர் சொற்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்று சிந்திப்பதே இல்லை. ஏமாளியாக இருக்காமல் சிந்தித்துச் செயல்படுங்கள் என்றார்.