எழுத்தின் வர்ணம்
எழுத்துக்கும் வர்ணம் உண்டே...!
கோபத்தில் நான் எழுதுகையில்
அக்னியின் ஜ்வாலை வண்ணமே...!
தென்றல் என எண்ணங்கள்
குளிர்ந்திருகையிலே, அதன்
வண்ணங்கள் பச்சையே
சித்திரையில் பூத்து குலுங்கும்
பொன் மலர்களின் வர்ணனையில்,
மஞ்சள் நிறம் கலந்திருந்ததே
செவந்தி பூ கொத்தொன்றை
எழுத்துக்கள் சிறப்பிக்கையில்,
சிவப்பு பங்கு கொண்டதே
மழலையின் மனதை
வர்ணிக்கையில் மட்டும் எந்தன்
எழுத்துக்கள் வெள்ளையானதே
காதலை வர்ணித்தேன்,
எழுத்துக்களில் பல
வர்ணங்கள் ஊஞ்சலாடியதே
அன்பினை வடிவாக்கினேன்
எழுத்துக்களில், ராஜ வர்ணம்
அதில் பிரதானமானதே
எழுத்துக்கள், எண்ணங்கள்
வர்ணம் கொண்டதே, வெள்ளை நிற
காகிதத்தில் தன்னை நிறைத்ததே