சிந்தனை சிறகுகள்

சிந்தனை ஊற்றுக்கள் எனக்குள்ளே
சிறகடிக்க,செந்தமிழ் பாட்டுக்கள்
எழுத்தினிலே பிரவாகிக்க

சந்தங்கள், சங்கீதமாகி எங்கெங்கும்
ஒலி பரப்ப,சரமாரியாக வந்து
விழுந்ததய்யா,எனக்குள்ளிருந்து
கவி மழைகள்

சந்தன மணங்கள் எந்தன் எழுது
கோலில் மறைந்திருந்ததோ?

சில்லெனும் தென்றல் எந்தன்
அடிமையானதோ?

சிற்பி ஒருவன் உளி கொண்டு
செதுக்கிய சிற்பம் போலே, என்
எழுத்துக்கள் ஆனதே

சிறகடித்து பறக்கும், பறவையை
போலே எண்ணங்கள் சீறி பறந்ததே

கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் இளம் மாலை வேளையிலே, கடற்க்கரையில் அமர்ந்திருந்தால், காட்சிகள் கற்பனைக்கு தீனியே

அலை அடித்து, அடித்து ஓய்வது போலே, என் கரங்கள் எழுதி, எழுதி ஓய்ந்ததே

அனல் அடித்து தங்கம் அழகிய ஆபரணமானது போலே, என் உள்ளத்து அனல் எழுத்தாகி கவி மாலையானதே

கல்லெடுத்து நான் எறிய, மாம்பழங்கள் உதிருதய்யா, பொல, பொலவென்று, காகிதமெடுத்து நான் எழுத, எழுத்துக்கள் வந்து விழுகுதய்யா, சர, சரவென்று

கவிதைக்கு உயர் அர்த்தங்கள் தருவது ஒரு கலைஞனின் கற்பனையல்லவோ?

கற்பனைகள் என்றென்றும் எண்ணத்தின் ஏக, போக வாரிசல்லவோ?

சிந்தனைகள் சிறகடிக்க, எந்தன் மனம் அதை அனுபவிக்க, கரம் எழுத்தாக்க

செந்தமிழ் கடலினிலே மூழ்கி முத்தெடுத்த சந்தோஷமே எனக்குள்ளே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (5-May-14, 6:10 am)
Tanglish : sinthanai siragukal
பார்வை : 520

மேலே