கம்பன் மகன்

கவி கடலில் மூழ்கி முத்தெடுத்த
பாவலரே

கண் இமைக்கும் நேரத்திலே,
கவி தொடுக்க வல்லவரே

கலை நயத்தை எழுது கோலால்
உருவாக்கி கவி அரசை ஆண்ட
மன்னவர்களே

பாவலர்க்கு போட்டி இருக்கலாம்,
பொறாமை எதற்கோ?

ஓட்ட கூத்தரின்
பொறாமையல்லவோ, கம்பன்
மகன் மறைவுக்கு காரணமானது

அம்பிகாபதி அற்புத கலைஞன்
அல்லவோ? அவன் கம்பனுக்கு இறைவன்
தந்த தனி வாரிசல்லவோ?

காதலுக்கு உட்பட்டது அவன்
தவறல்லவே, காதலி, மன்னன் மகள்
என்றானது விதியல்லவோ?

காவியங்கள் படைத்த பாவலர்
ஒருவர், காரணங்கள் கற்பித்து கலைஞனை அழித்தது கொடுமையல்லவோ?

அம்பிகாபதியே, நீ அமைதி
கொள்ளடா, இந்த காலத்திலும் காதலர்கள்
மரணம் ஏற்றாரடா

உந்தன் ஆத்மா சக்தி கொண்டு
ல்லா உண்மை காதலரையும் காக்க
வேண்டுமடா, இது என் வேண்டுகோளடா

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (5-May-14, 7:06 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : kamban magan
பார்வை : 96

மேலே