எண்ண அலைகள்
என்னுள்ளே ஏதேதோ
எண்ணங்கள் அலை பாயுதே
மண்ணுள்ளே புதையும் விதைகள்
போலே அவை ஆனதே
சிறு செடிகள் விதை வெடித்து
முளைப்பது போலே
சில வரிகள் என் மனதினை
தாண்டி, வெளி வந்து விழுந்ததே
சிந்தூரம் அலங்காரம்
மகளிர் நெற்றிக்கு
சிந்தனைகள் அலங்காரம்
மனித மனதிற்கு
சிறகுகள் துணை போகும்,
பறவைகள் பறப்பதிற்கு
சிலம்புகள் ஒலி சேர்க்கும்,
பாவையின் நாட்டியத்திற்கு
சிற்பங்களின் நளினங்கள் தான்,
சிற்பத்திற்கு உயர்வு தருவதே
சித்திரத்தின் உயிர் துடிப்பு தான்,
ஓவியத்தை பேச வைப்பதே
சிங்கார தேருக்கு அலங்காரம்
தருவது அழகான வண்ண மலர்களே
ஒய்யாரமாய் அது வீதியிலே ஊர்வலம்
வருவது கண் கொள்ளா காட்சியே
எண்ணங்கள் ஏற்றம் பெறுவது அது எழுத்தாவதினாலே
எழுத்துக்கள் எல்லோர் உள்ளத்திலும்
ஊன்றுவது, அது பதிவான பின்னாலே
அது எல்லைகள் மீறி, எங்கெங்கும்
சேர்ந்தால் எனக்குள்ளே மகிழ்ச்சி
வெள்ளமே
கருத்துக்கள் வந்து என்னை
சேர்ந்தால், இன்னும் எழுதிடுவேன்
உற்சாகத்துடனே