அனாதைகள்
சிட்டு குருவிகள் இரண்டு
சிட்டாக உயர பறந்ததே
சிறு குஞ்சுகளை கூட்டில்
விட்டு சென்றதே
தன் குஞ்சுகளுக்கு இரை தேடி
வரும் கடமையை செய்யவே
சிறு குருவிகளுக்கு உள்ள உணர்வு,
சில மனிதருக்கு இல்லையே
பெற்ற மக்களை வீதியில்,
பசியில், வாடிட விட்டனரே
தரணிக்கு அவர்களை கொண்டு
வந்த மானிடரே,
தன் கால்களில் அவர் நிற்கும்
வரை பாதுகாப்பது உங்கள் கடமையே
தாரகத்தில் வர வேண்டும் என்று
எந்த குழந்தையும் கேட்பதில்லையே
தாங்கிட உம் மக்களை, சக்தி
இல்லை எனில், பெற்றிட ஏன் ஆசையோ?
ஏங்கி தவிக்கும் இளம் உள்ளங்கள்,
ஏக்கத்துடன் உணவை பார்க்கும்
அவர் விழிகள்
எத்தனை ஆசிரமங்கள் அமைத்தாலும்
போத வில்லையே
அத்தனை குழந்தைகள் மண்ணில்
அனாதைகளாய் தினம் ஆவதினாலே
ஐந்தறிவு கொண்ட உயிரினங்களை
பார்த்து கற்று கொண்டால்
ஆறறிவு படைத்த உயர் படைப்புக்கள்,
அனாதைகள் எண்ணிக்கை குறையுமே
ஏதோ ஆதங்கம் அதை எழுத்தில்
காட்டியுள்ளேன், ஏதேனும் எல்லோரும்
செய்தால்
இந்த கொடுமைக்கு கொஞ்சம் விடிவு
காணலாம் என்ற உணர்வுடனே