புதிய மழை - கே-எஸ்-கலை

கர்ப்பிணி வயிற்றில்
காதுவைத்துக் கேட்கலாம்
பூ பூக்கும் ஓசை !-----------சென்ரியு !
===
புத்தம் புதிய மழை
தூறிக் கொண்டிருக்கிறது
கடல் மேல் !--------------ஹைக்கூ !
===
சூரியனின் பிள்ளை
என்றாலும் சுட்டதில்லை
தூறும் மழை !------------------சென்ரியு !
===
ஊர்விட்டுப் போன குருவி
திரும்பி வந்து பேசுவதில்லை
வேறு வேறு பாசை !-----------சென்ரியு
===
சிங்கத்தின் இறைச்சி
தின்கிறது இன்னொரு சிங்கம்
மான்கள் அழிந்த காடு ! -------------ஹைக்கூ

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-May-14, 8:44 am)
பார்வை : 339

மேலே