முல்லைவாசன் ஹைக்கூக்கள்

தலையில் தீட்டினார்கள்
கூா்மையானது
தலையெழுத்து

முழித்தது
பிள்ளையாா் சுழி
தலைவர்களின் கமிசன்.

புல்லரித்தது புல்
நெற்றியில்
பனித்துளி பொட்டு

எறும்புகள் வரிசை
வறுமைக் கோடு
பாதங்களே பராக் பராக்.

வானத்துக்கு கல்மனது
கழுதைகளுக்கு
கல்யாண குணம்.

எழுதியவர் : முல்லைவாசன் (6-May-14, 5:24 pm)
சேர்த்தது : முல்லைவாசன்
பார்வை : 125

மேலே