பரவலான மழை பரவசமான தேகம்

சற்றுமுன் வரை
அக்னி கத்தியெடுத்து
கொடுமைப்படுத்திய
வியர்வை அரக்கி
என் உசுரை கிழித்தாள்...!

இப்பொழுது...!
மழைத்துளி பேனாவுக்குள்
மேகத்து குடுவையிலிருந்து
நிறமற்ற ஒரு மையெடுத்து
வரைமுறையற்ற ஒரு காதலுடன்
வரையறையற்ற மோகத்துடன்
என் மேனித்தாளில்
ஒரு தழுவல்காவியம்
எழுதப்படுகிறது..!
ஆஹா...! இந்த
அற்புதம் என்னவென்பேன்.
இந்த ரசிப்பில்
செத்துத்தொலைந்தேன்...!
கிளிர்ச்சியூட்டும்
குளிர்ச்சியின்பம்...!
சிலிர்ப்பூட்டும்
உணர்ச்சிமயம்..!

-----------------------------------------

முறைப்பெண்ணின்
முந்தானை சேலை
முகத்தில் பட்டதோ...!
முகமெங்கும் பருவமுத்துக்கள்..!

அன்றொரு கனவில்வந்த
அந்தரங்க காதலியின்
சுவை முத்தமோ..!
இதழ் இடுக்கில்
மாட்டிய முத்தத்துளிகள்...!

இந்திர லோகத்து
சுந்தரிகள் எனை
மன்மத நாயகன்
என்று மயங்கிவிட்டார்களோ...!
என் தேகக்கட்டையில்
உரசிசுவைத்து
மலைத்து தேங்கும்
காமத்தேன் துளிகள்....!




இன்னும் முடியவில்லை....!
மழைக்கன்னிக்கு
எனைவிட மனமில்லை..!


--இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (7-May-14, 1:14 pm)
பார்வை : 502

மேலே