+++எனை காதலிக்கிறேன் என+++

தயக்கமில்லை
தயங்கிட நீயும்
தயங்கவில்லை...........!

உறக்கமில்லை
உறங்கிட நானும்
நினைக்கவில்லை...........!

என்றுமே பேசும்
தொலைபேசி உறக்கத்தை
தேடுகிறதே உன்னிடம்
பேசுவதால் ...........!

இரவை பகலாக
மாற்றி நமது உறவை
இரவாக
கொண்டுச்செல்லும்
வித்தைக்காரி நீ..........!

நான் பேசி நீ பேசி
தொலைபேசி நம்மை ஏசி
என்றுமே துன்புறுகிறது
அது உனக்கு
தெரியுமா............!

பார்பவர்க்கு
தனிமையில் புலம்பும்
பித்தனாக தெரிகிறேன்
என்றுமே உன்னுடன்
பேசுவதால்............!

அவர்களுக்கு
தெரிந்திடுமா
இந்த தொல்(லை) பேசி
காதலை...........!

இன்னும்
என்னிடம்
என்ன இருக்கிறது
தொலைபேசியின்
மாதபிள்ளோ
எகுறி செல்கிறது..........!

பேசியது
போதும் ஒருவார்த்தை
சொல்லிவிடு
எனை
காதலிக்கிறேன் என.......... ....!

எழுதியவர் : லெத்தீப் (7-May-14, 8:51 pm)
பார்வை : 98

மேலே