என்றும் நீங்கா

உன்னை கண்ட முதல் நொடி...
நீ சிரித்த முதல் சிரிப்பு..
என்னோடு நீ பேசிய முதல் வார்த்தை...
இன்றும் எனக்கு
இனிக்கிறதடி....


உனைக்கான உன் வாயிலருகே
காத்துக்கிடந்த
சுகமான பொழுதுகள்
இப்போதும்
இனிக்கிரதடி....


உன் மொழிகளை
என்செவிகளால் கேட்டிட
உன் வகுப்பறை ஓரம்
நிற்பது இப்போதும்
இனிக்கிரதடி....

உன் ஓரப்பார்வைக்காய்
உன் வீட்டுத்தெருவில்
சுற்றித்திரிவது
இப்போதும்
இனிக்கிரதடி..

என காதலை சொல்லிட
உன்னிடம்
நான் தந்த
கவிதையை யாரோ
எழுதியதென
எண்ணிவிட்டாயடி....




உன்னால் என் வாழ்வில்
வண்ணங்கள்
வட்டமிட்டன..
என்று நீ எங்கோ
நான் எங்கோ இருந்தும்
என்னில் தேவதையாய் வாழ்கிறாயடி...


உன்னை நேசித்ததை
ஏனோ
என்னால் கடைசிவரை
சொல்லிட
முடியவில்லை காரணம்
புரியவில்லையடி...



எத்தனை பெண்ணை
பார்த்தாலும்
உன் மேல் கொண்ட
பிரியம் வரவில்லையடி...


எப்போதும் என்
கவிகளில்
ஜீவன் நீதானடி..
என் உயிரில்
கலந்தவள் நீ
மட்டும்தானடி...

எழுதியவர் : nasri nehan (7-May-14, 11:40 pm)
சேர்த்தது : நஸ்ரி நேஹான்
பார்வை : 108

மேலே