தாவரமே தா வரமே - வினோதன்

அவள் விழி போகும்
வெளிச்சப் பாதையில்
ஒட்டப்பட்டு இருக்கின்ற
என் காதலை உணர்த்தும்
கடிதப் பதாகைகள் !

என்னால் மட்டுமே
படிக்க முடிந்த - கடித்து
குடிக்க முடிந்த - அன்பு
படிந்து கிடக்கும் - அதை
மடித்து வைக்கிறேன்
மனதின் விழுதொரம் !

கன்னியின் கண்ணிற்கு
கீழான கன்ன காடுகளில்
கண்ணனின் - கண் பதிய
காதல் - அவள் உதடுவழி
ஊர்ந்து - என் உதடேருகிறது !

ஒரு மழை நாளின்
மயக்கத்தில் - என்
இடப்பக்கம் சாய்ந்தபடி
என்னிதயம் புகுந்து
நான் - முன்னமே வைத்த
அவள் கடிதம் கண்டாள் !

சமயங்களில் அவளுக்கே
புரியாத - அவளின் விழி
மொழிகளை - மொழிபெயர்த்து
பதிந்திருந்தேன் - படித்துவிட்டு
சிரிப்பிற்கும் புன்னகைக்குமான
இடைப்பட்ட - ஏதோவொன்றை
என் கண்ணிடுக்கில் பாய்ச்சினால் !

உடலெங்கும் - இலையென
காதல் பூக்கும் - அதிஅதிசய
தாவரமே - தவறாமலெனக்கு
தா வரமே - உன்னோடே
வாழ்ந்துவிட - உயிருள்ளவரை !

வினோதன்

எழுதியவர் : வினோதன் (8-May-14, 6:42 pm)
பார்வை : 81

மேலே