வளங்களால் வல்லரசாவோம்

உழுத நிலம் செழிக்க மகிழ்ந்து
மரம் செடிகள் வளர்க்க முனைந்து
மும்மாரி பொழிந்த மண்ணிலன்றோ
மூதாதையர் வளமுடனே வாழ்ந்தனர்...

வளம்செழுமை கண்டபல வேநாட்டரசனும்
நாட்டை அன்று களவு கொண்டிருந்தும்
ஏர் கூட்டி விளைச்சல் பெருக்கி
செல்வம் தானே சேர்த்திருந்தான்....

மாற்றம் காணும் மனிதநின்று வளமதை
கொன்றவனாய் காட்டை அழித்து வீட்டை
கட்டி இயற்கை அழியும் மண்ணிலின்று
செயற்கை சார்ந்தே நோயிலல்லோ மடிகிறான்...

நமது விளைச்சல் சார்ந்தே அயல்நாட்டு
உணவும் இருக்கு சுழற்சிமுறையில்
பயிர்செய்தல் வளத்தில் நிறைந்தே
வல்லரசாய் நாம் முன்னிருப்போம்...

நாம் பகிர்ந்த்தை தின்று வளர்ந்தவனின்று
உழவதை கற்றான் அவனிடத்து உயிர்பிக்க
வரும் நாளில் தயவின்றி உண்டிடுவான்
பலகோடி செலவில் இயற்கையை அமைத்து....

நாகரீகம் தேடிசென்று செயற்கையினை
தலைவணங்கி செழுமையினை இழந்தவனே
நாளை ஏழ்மை நமக்கு வந்தால் கட்டிடங்கள்
சோறு போடுமா வறுமையதில் வாழ்வுனிக்குமா...

கோடி சேர்ப்பவனும் வாட்டும் பசிக்குயென்றும்
அடிமையாக வளம் அழித்திடும் மனிதனென்றும்
சந்ததிக்கு வெறுமை என்னும் வறுமை சேர்த்தே
வாழ்வுழந்து மண்ணில் மடிவான்...

அன்று நாடுகொண்ட வளமதை நாம்
பேணியிருந்தால் இன்று அயல்நாடினையே
செழுமைகொண்டு நமது அடிமையாக
தினம் அடிபணிய வைத்திருக்கலாம்...

இழந்ததை நாம் இழந்துவிட்டோம் இனிவருந்தி
பயனில்லை இருப்பதை நாம் காத்திடுவோம்
முயற்சி என்றும் வீண் போவதில்லை
இயற்கையை அழித்தபழி பிறர்கென்றால்
இயற்கையை காக்கும்பணி நமதென்று முன்வருவோம்..!!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (9-May-14, 3:34 pm)
பார்வை : 67

மேலே