மனபாரம்

என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிபெருமக்கள் அனைவருக்கும் தொடர் நன்றிகளுடன்.... என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் நடப்பு அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளித்தபடியே படைக்கபட்டிற்கும் அந்த வரிசையில்..தற்போதும் என் மனதை பாதித்த ஒரு உண்மை சம்பவத்திற்கு உள்ளம் வருந்தி...கண்டனத்தோடு எழுதிய கற்பனை வரிகளை தங்கள் பார்வைக்கும் வைக்கின்றேன்...

அந்த சம்பவ பற்றிய பின்னனி :::

கடந்த 2012 வருடம் பிப்ரவரி மாதம் 9ம் நாள் சென்னை மாநகரின் மைய பகுதியான பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கல்விக்காக கண்டித்த ""உமா மகேஸ்வரி""" என்ற ஆசிரியையை ""கத்தியால் தண்டித்த"" இர்பான் எனும் ""மாறுவேடமிட்ட மாபெரும் மாணவ அரக்கனின்""" கொலைவெறி தாக்குதலை கண்டித்து எழுதிய வரிகள்....

(குறிப்பு::: வழக்கு நீதி மன்றத்தில் இருந்ததால்.. இது வரை இந்த படைப்பை வெளியிடாமல்... தற்போது அந்த குற்றவாளிக்கு வெறும் 2வருடம் சிறை என தீர்ப்பு வந்தபின் வெளியிடுகிறேன்)


மாணாக்கனாய் உனையே நினைதாளடா-மாறாக
மாபெரும் அரக்கனாய் அவள் முன் உதிதாயடா..

மாணிக்கமாய் உனை காண நினைத்தே மதிகெட்ட
உனையும் மகனாய் நினைதபடி--பெற்ற
மகளிரண்டையும் விடுதியில் துறந்தாளடா...

துயர்வனத்தில் இருமலர்கள் ஆடுதடா--நித்தமும்
அழுத வண்ணமாய் வாடுதடா--அதுதான்
அவர்தம் அற்புத பிள்ளையடா

மடியமுதம் தந்த தேகம் மடிந்ததை கண்டு
மனமிருண்டு மனமிரண்டு வருந்துதடா...
மீண்டும் வருவாளா மீண்டு தான் வருவாளா என
மீளாதுயரிலும் அவர் விழி தேடுதடா

புத்தியால் உன் புகளுயரம் காண நினைதாளடா
சிறு கத்தியால் அவள் கனவை சிதைத்தாயடா...

பிளைஎண்ணி இனி பயனேதடா..
விலையில்லா உயிருக்கு விடை கூறடா...

புல்லை பெற்றாலும்
பெருமைப்படும் பூமித்தாயவளும்.... நீ
புழுவாக பிறக்க நினைத்தாலும்
புண்ணாக கருதி மறுப்பாளடா.....

போதுமடா சாமி!!! இனியும் இது பொன்னான
பூமியென தொடர் பொய்உரைத்தால்
பொறுக்காது பூமி...

இனி இந்த மண் உன்னை ஏற்க்கும் வரை...
நாங்கள் அனைவரும்.....
"""மெளனமாய் நடக்கின்ற மயான பூமி""""





(4.3.12 அன்று ஈரோட்டில் நடந்த பூங்கா கவியரங்கில் பரிசை வென்ற தொகுப்பு)

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (9-May-14, 9:00 pm)
Tanglish : manabaaram
பார்வை : 466

மேலே