என் அன்னைக்கு சமர்ப்பணம்
தில்லையிலே பிறப்பெடுத்த
தெவிட்டாத தேனமுதே
எனதம்மாவே...
அரசாங்க வேலைக்கு
ஆயிரம்முறை
மனு கொடுத்தாய்..
கிடைக்காமல் போனதென்று
அணு அளவும் சோர்வில்லை
உன்னிடத்தில்
அச்சகத்து வேலையிலே
அஞ்சாமல் பணிசெய்தாய்...
சிப்பிக்குள் முத்தைப்போல
எனை சீராட்டி வளர்த்தவளே...
தந்தையின் பிரிவிற்குப்பின்
தந்தைக்கு தந்தையாய் நின்றவளே...
வீரத்திலே ஜான்சியையும்
கருணையிலே அன்னையையும்
பொறுமையிலே பூமித்தாயையும்
சொல்லி சொல்லி
உளி உளியாய் எனை செதுக்கினாயே
நான் சிற்பமாவதற்குள்
அமரர் ஊர்தியிலே அடைக்கலமானாயோ
இதோ
உனைக்காண
ஓடி வருகிறேன்...
எனை காணுகின்ற கண்களெல்லாம்
உன் கண்கள் போலிருக்கே...
நான் ஆனேன் மேகமாக
மேகம் கூட சோகமாக
பெய்ததங்கு கண்ணீர் மழை
சோகம் மனதில் தங்குதம்மா
கண்ணீர் கடலாய் பொங்குதம்மா...