காதல் ராணியே - எனது முதல் அறுசீர் விருத்தம்

நான் முதன் முதலாய் எழுதிய அறுசீர் விருத்தம். இப்பொழுது தான் விருத்தங்கள் எழுத பயிலுகிறேன்.

கண்ணோடு கண்ணாய் நீயும்
--கலந்தாயே காதல் ராணி
மண்மீது பூக்கும் பூவாய்
--மகிழ்ந்தாயே ஆசை தேவி
விண்ணோடு தூவு கின்ற
--விண்சாரத் தண்ணீர் போல
எண்ணோடு அடங்கா அன்பைப்
--பொழிந்தாயே நீயும் வாழ்க

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (10-May-14, 8:29 pm)
பார்வை : 95

மேலே