உன் சாம்பல் கூட சாதிக்கும் -- இராஜ்குமார்

==========================
தன்னம்பிக்கை கவிதை - 3
==========================

விடிந்த பின்னும்
வீட்டில் தூங்கி
விண்ணை தொடும் கனவு ஏன் ..??

உன் தேடல்
தெரு வரை என்றால்
வாய்ப்புகள் வாசல் வருமா ..??

சோகம் என்பதில்
முத்தா உள்ளது - நீ
மூழ்கி போக ..!!

இன்னலை எடுத்து
இமை முன் வைத்து
தோலை உரித்து
தூக்கி வீசு ..!!

காலம் கற்று தரும்
வழிகளை
விரட்டி பிடித்து
விழியில் வை ..!!

பாதம் முன் நிற்கும்
பாறைகளின்
பட்டை உரித்து
படிகளாக்கு ...!!

அடுத்த பாதம்
அடி வைத்து
பயணம் செய்ய ..!!

சோம்பல் கொண்டு
நீ திரிந்தால்
உன்னுள் எறியும் தீயும் ஏமாற்றும் ..!!

நம்பிக்கை கொண்டு
நீ நடந்தால்
உன் சாம்பல் கூட சாதிக்கும் ..!!

இன்று வரை என் செய்தாய் ..??

இறந்த பின்னும்
இலையின் பயணம்
நதியின் மேல் - எறும்பை ஏந்தி ..!!

இலையை விட
இழிந்தவனா நீ - இல்லை
நீந்தி செல் - இக்கடலில்
பலரை ஏந்தி ..!!

தடுக்கி விழும் தருணத்தில்
நம்பிக்கையை நெஞ்சில் வை ..!!

ஏறி செல்ல ஏணி எதற்கு ..??
எல்லா எறும்பும் சாட்சி இதற்கு ..!!

சீறி பாயும் காற்றை பார் ..!!
இன்னும் - நீ பறக்க
சிறகு வேண்டி நிற்பதேன் ??

பறந்து வா காற்றை போல் ..!!
உலகம் - உன்
சுவாசத்தில் ..!!

-- இராஜ்குமார்

தன்னம்பிக்கை கவிதைகள் தொடரும்....

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-May-14, 12:05 am)
பார்வை : 366

மேலே