மனிதன் எங்கே 4000
புது யுகம் என்ன விசித்திரம் ?
அதே மனிதன் என்ன சரித்திரம் ?
எந்திரத்தைப் பார்த்து மனிதன் ஏன் மகிழ்ந்தான் ?
செயற்கை செய்து தன்னையே ஏன்
அர்ப்பணித்தான் ?
கண்களும் செயற்கை ! இதயமும் செயற்கை !
அப்ப எங்க தான் போவது இயற்கை ?
மனிதனின் சாதி -- எந்திரமும் பாதி !
பாதியும் முழுதாகி -- முழுதும் உருவாகி !
மனிதன் எந்திரத்தை ஆக்கியது !
எந்திரமும் ரிதத்தைப் பாடியது !
மனிதன் எங்கே ? மனிதன் எங்கே ?
நம்மலைப் படைத்த மனிதன் எங்கே ?