அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
இன்று மட்டும்
ஏதோ பிதற்றும்
அன்பு புதல்வர்களே
அன்னையர் தின வாழ்த்துக்களை
சொல்லும்
அறியாமைவாதிகளே
சற்று சிந்தியுங்கள்
தன் உடலை
நம் வசிக்கும்
அறையாக்கி
தன் உதிரத்தால்
நம்மை உயிராக்கி
திங்கள் பல சுமந்து
ரணமாய் வலி கொண்டு
போர்கள வெற்றி போல்
நம்மை ஈன்ற
நம் அன்னையையும்
நம் கனவுகளை எல்லாம்
நிஜமாக மாற்றியமைத்து
நம் கை பிடித்து
உலகம் ஆள நுனுக்கங்களை
கற்றுக்கொடுத்த
நம் தந்தையையும்
உலகின் வீதிகளில்
அனாதையாய்
விடப்படாத தேசமும்
முதியோர் இல்லமே
இல்லாத தேசமும் தான்
அன்னையர் தினம்
கொண்டாட அனைத்து
தகுதிகளும் உடையது
உலகில் அதிகமான
முதியோர் இல்லம்
இருக்கும் பெருமிக்க
இந்திய தேசமே
உனக்கு அன்னையர் தினம்
கொண்ட துளி கூட
அருகதையில்லை
இதில் நானும்
உள்ளடங்குவேன்
தன் பெற்றோரை
முதியோர் இல்லத்தில்
குடியேற்றும்
செல்வ சீமான்களே
உங்களுக்கும்
முதுமை வரும் என்பதை
மறவாதீர்..!
என்னை ஈன்ற
என் அன்னைக்கும்
என்னை வழிநடத்தும்
தமிழன்னைக்கும்
இந்த உலகை
புரட்சி பாதைக்கு
மாற்றியமைத்த
உலகின் புரட்சியாளர்கள்
அனைவரது
அன்னையருக்கும்
அன்னையர் தின
நல்வாழ்த்துக்கள்...!