இதுதான் வாழ்க்கையா

இதுதான் வாழ்க்கையா

....""" இதுதான் வாழ்க்கை(யா) ""....

தேவதைகள் ஒன்றாய் கூடிய தேர்
சேவை செய்ய தேடிவந்த சொர்க்கம்
தென்றலாய் வந்திறங்கிய வசந்தம்
மதி மயக்குகின்ற விதி சேர்த்த சதி
பாசாங்களை சுந்து வந்த வாசமலர்
கற்பனையிலும் சிக்காத சித்திரம்
உண்மையால் நெய்தெடுத்த பொய்
காதலால் களவாடப்பட்ட உள்ளம்
அன்பினால் பிணையுண்ட நெஞ்சம்
கூடலினால் குதூகளித்திருந்த இரவு
மாரணைத்த மஞ்சத்தின் நிலைப்பு
பாசத்தினால்உருகியிணைந்த உறவு
மாறியொலித்த இதயத்தின் துடிப்பு
க(ன்)னியிதழால் சுவைகூடிய எச்சில்
என் காதல் கவிதையின் முதல்வரி
கனவுகள் மெய்ப்பட்ட ஒரு காவியம்
கைகளுக்குள் அடங்கிய முழுநிலா
கவிதையினால் மெருகேறிய எம் தமிழ்
எல்லாமும் சிறப்பாய் மிளிர்ந்து நிற்க
ஓட்டை விழுந்த காகித கப்பலாய்
ஏனோ வாழ்க்கை மட்டும் தோல்வியில்

இன்றும் என்றும் உன்னோடு ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (11-May-14, 3:33 pm)
பார்வை : 74

மேலே