சிறப்புக்கவிதை 31 விமர்சனம் தியானம் - குமாரா 67

"நங்" கென்று மணியடித்துத் தொடங்குகிறது கவிதை...
"தியானம் ,
மன சலன சமாதானம்!
அகப்பிரேமம்! அமைதி ஞானம்!"

ஓங்கார மணியோசை ஒலியலைத் தேய்வுகள் தருவிக்குமே ஒரு கனத்த அமைதி..! கனத்த அமைதி என்றாலும் மனம் தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு இலகுவாய் இருக்கிறது படைப்பு..

பளுக்கள் தூக்கி கனத்த மனதுக்குள் ஒரு சுகந்தமாய் நுழைந்து பளுப்பதிவுகளில் மயிலிறகு வருடி சாந்தப்படுத்துகிறது இவரின் எழுத்து.. மனிதன் கோபச் சக்கரங்களில் குதித்து தன் முற்பரிணாமத்திற்கு செல்லாமல் ஒரு தலைவலி தியானம் என்பதை
" ஆறரிவின் அற்புதம்!
அகதிண்மம்! ஆன்ம பலம்!" என்று அழகாக சுருக்கி உரைத்துள்ளார் படைப்பாளி.. வாடிய பூக்கள் தியானித்தால் மறுபடியும் மலர்ந்திடுமோ என யோசிக்க வைக்கிறது படைப்பு.. சுகந்தம்... தெளிவு..!!!

எழுதியவர் : சரவணா (12-May-14, 9:55 am)
பார்வை : 111

மேலே