வரும் பிரதமருக்கு ஒரு கடிதம்
வரும் பிரதமருக்கு ஒரு கடிதம்
வரும் பிரதமரே ....!
தபால் கார்டும் கிடைக்க வில்லை - ஏனோ
தட்டிக் கேட்கவும் நாதி இல்லை - ஒட்டுப்
போட்ட விரல் மையும் காணவில்லை
ஏழை எங்கள் தல விதி தீர இன்னும் விடுவு இல்லை
இருந்தாலும் உங்களுக்கு ஒரு கடிதம் .........!
ஜன நாயகத்தை சுரண்டி வாழ்கின்ற
பண நாய்கள் ஒடுக்கப் பட வேண்டும்
ஆளுக்கு ஒரு கட்சி நாளுக் கொரு நீதி என்ற
அநியாயங்கள் ஒழிக்கப் பட வேண்டும்
ஒழிந்துப் போன விவசாயம் புத்துயிர் பெற
சொட்டுப் பாசன திட்டம் கொண்டு வர வேணும்
கழனியை சிமெண்ட் காடாக்கும் கொடுமை
ஒழிக்க சட்டம் கொண்டு வர வேணும் ....!
நாட்டை சுரண்டும் அந்நிய முதலீட்டை
அவசரமாய் தடுத்து நிறுத்த வேணும்
புதிய பொருளாதார கொள்கை அழிய வேணும்
வறுமை ஒழியும் திட்டம் கொண்டு வர வேணும்
முயற்சி செய்வோர்க்கும் முடியாமல்
போனவருக்கும் - அரசே சிறந்த பயிற்சி
அளிக்க வேணும் - கிராமத்திலே ஏரி குளங்கள்
வெட்டி மடிந்து போன விவசாயத்தை
மறுபடியும் தூக்கி நிறுத்த வேணும்
மதமும் அரசியலும் மழை நீர் கலந்த
மண்ணாக கலந்திடாமல் மக்களுக்கு
நல்லதையே செய்யும் மூலிகை மருந்தாக
மக்கள் மனதிலே கலந்திட வேணும்
பாதையில் படுத்து பரிதவிக்கும் ஏழைக்கு
வேலைக் கேற்ற கூலி கொடுத்து அவர்
வாழ்வில் விளக் கேற்ற வேணும் -அவர்
குழந்தைகலுக்கு இலவச கல்வி தர வேணும்
லஞ்சம் ஊழல் செய்வோரை குண்டு போட்டு
கொன்று ஒழிக்க வேணும் - அவர் ஒட்டு மொத்த
குடும்பங்களை மண்ணில் போட்டு புதைக்க வேணும் - இதுவே எனது வேண்டுகோள்
இப்படிக்கு
ஓட்டுபோட்ட இந்திய குடிமகன்