முற்றுகை இடும் புகைக்கு முற்றுப்புள்ளி வைப்போமோ

நஞ்சை அமிர்தமாக எண்ணி
நஞ்சடங்கிய சிகரட்டை தினம் உள்ளிழுத்து
நல் வாழ்க்கையை சிதைத்து இவன்
நல்லவனா ? என
நான்கு பேரை ஐயப்படுத்தி
நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி
நண்பர்களை புறக்கணித்து
இருட்டில் வாழ்க்கையை செலுத்தி
அறியாமையில் வாடி
இறப்பின் தருணத்தை இரட்டிப்பாக குறைத்து
இங்கிலீஷ் மருத்துவர்களுக்கு
இது வரை சேமித்த பணத்தை
இன்னலோடு கொடுத்து
வாழ்க்கை எனும் பூந்தோட்டத்தில்
பூக்களை பறிக்காமல்
புகையில் காதல் கொண்டு
புற்று நோயை அறுவடை செய்யும்
புகைப் பிரியர்களே !!
வாழ்வின் அர்த்தத்தை புரிந்து
வளமான ஆரோக்கியத்தை முன் நிறுத்தி
இனிய இதயத்தை நேசித்து
புகையை புறக்கணித்து
புன்னகையோடு வாழ்வில் பெயர் பதியுங்கள் !