முதல் காதல்
முதல் காதல் சுவையரின்தவர் சிலர் உண்டு
நானும் ஒருவனே!!!
முதல் காதல் போல் சிறந்த இன்பமில்லை!!!
பார்க்கும் யாவும் அவள் முகம் ஆவதுண்டு....
கேட்கும் இசை அவள் குரல் ஆவதுண்டு....
செல்லும் வழியில் பூக்கள் விழுவதுண்டு....
பாதங்கள் காற்றில் மிதப்பதுண்டு....
அவளின் நிழல் இரண்டவதுண்டு....
என்ன நிழல் காணாமல் போவதுண்டு....
அவளை பற்றி வார்த்தைகள் ஆயிரம் சொல்வதுண்டு....
நான் யாரென்று மறந்து போவதுண்டு....
ஒரு சிரிப்பை பார்க்க அலைந்ததுண்டு ....
கவிதை பல எழுதியதுண்டு ....
தென்றலை என்றும் உணர்வதுண்டு....
சாரல் வந்தால் நனைவதுண்டு....
தனிமையை பலமுறை விரும்பியதுண்டு....
ஓவியம் சில வரைந்ததுண்டு ....
தனியே ஒரு பயணம் ஆர்வமுண்டு....
விரல்களில் அவள் விரல் சேர்க்க ஆசையுண்டு....
அவளுடன் வாழ நினைத்ததுண்டு....
அவளை அணைக்க நெஞ்சமுண்டு....
ஒரு வார்த்தை பேச அலைததுண்டு....
பேசாமல் கண்ணீருடன் திரும்பியதுண்டு....
முதல் காதல் போல் துன்பமில்லை!!!!!
தூக்கத்தை மறந்ததுண்டு....
குடும்பத்தை மறந்ததுண்டு....
நண்பனை பிரிந்ததுண்டு ....
மதுவினை நாடியதுண்டு....
பெண்மையை வெருததுண்டு....
கடவுளை பழித்ததுண்டு ....
மகிழ்ச்சியை தொலத்ததுண்டு....
இகழ்ச்சியை பெற்றதுண்டு ....
நான் யாரென்று வினாவியதுண்டு ....
மரணத்தை தேடிசென்றதுண்டு....
துன்பம் அறிந்ததுண்டு....
இன்பம் மறைந்ததுண்டு ....
வாழ்வே மாயமாய் போயதுண்டு....
வாழ்க்கையே மயானமாய் மாறியதுண்டு....