என் சூரியனே

சினந்து சுட்டெரித்து
மனக் கடலுள்
உன் சிவந்த முகம்
மறைத்து
நிசப்த இருள்
நிறைத்தாலும்
என் சூரியனே !
திசைகளற்று
மிதந்தலையும்
தீராக் காதலால்
தாளிட்ட என்
மனக் கதவம்
மெல்லத் திறந்து
நுழையும் உன்
ஒளிக்கரங்கள்
எனைத் தழுவும் போது
உயிர்த்தெழுவேன் நான்
மீண்டும் ஒரு புலரியாய் !

எழுதியவர் : thilakavathy (15-May-14, 1:00 am)
Tanglish : en sooriyanye
பார்வை : 124

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே