பேரன் குறள்கள் -10
யோரன் குறள்படித்து யோசித்தது:=குறள் யாப்பு=
எழுமுன்பே வந்து விழுவான்,என் மேலே
மழைபோல் வறண்ட நிலத்து!..............................01
கதிரோ டெழுந்து கடும்பகலும் ஆடி
முதிர நிலவுவரும் முன்!.......................................02
எதிரிலே பேரன் இருக்கப் பகலாம்
அதுவே அவன்,இல் இரவு!.....................................03
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை உலரும் மனம்............................................04
கனற்குழம் பாகக் கவிதை படைப்போர்
மனதுக்குப் பேரன் மருந்து!.....................................05
கணம்,கணம் தோறும் களிப்பினைக் கூட்டும்
இணைமோனை பேரன் எனக்கு!................................06
வாலிபத்துக் காதல், வளர்பருவ ஞானம்,உன்
நீலவிழிக் குள்,நிற்கு தே!.........................................07
ஓதிப் பொருளியல் உள்ளத்(து) இருத்திடு!
பேதம் அகற்றி,எடு பேர்!...........................................08
தன்னை மறைத்த தலைவன் குழந்தையாய்
உன்னுள் இருப்பான் ஒளித்து! .................................09
இன்பக் கதைகளின் ஏடும், இறைவனின்
அன்புக் கொடையும்,நீ ஆம்! .....................................10
===== ========== =========