நான் உன்னை நினைத்து

எனக்கும் உனக்கும்
காதல் இடைவெளி
அதிகரிகிறதை -என்
கவிதை புலப்படுத்துகிறது ...!!!

நானும் பனி புல்லும்
ஒன்றுதான்
இரவில் அழுகிறோம் ...!!!

நான் உன்னை நினைத்து
ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!

கஸல் 699

எழுதியவர் : கே இனியவன் (15-May-14, 12:08 pm)
பார்வை : 294

மேலே