கடந்த கன்னிக் கூந்தல்

தலைக்குக் குளித்து சற்றெ காய்ந்த
அந்தக் கன்னி கூந்தலின் மேலே
அக்காலைக் கதிர் மஞ்சள் மெல்லப் பரவ,
கருஞ்சிவப்பு இழையாய் அது காற்றிலாட ,
என்றோ ஒரு நாள் மட்டும்
ரெட்டை சடைப் பிரித்துவிட்டு
ஒற்றை அருவி 'pony tail ' லோடு,
செதுக்கிப் சிறிதாய் பெருத்த
கன்னங்கள் தொடும் பொன்னகையோடு
கண்மையிட்ட பெரிய கள்ளப்பார்வையில்
ஓரமாய் காதல் உரைத்துவிட்டு
கட கட வென மிதிவண்டியில்
எனை கடந்து நீ பள்ளிக்குப் போகும்
பருவ நாட்களின் நினைவுத் தாக்கம்
இன்றும் மூச்சை திணறடிக்குது !

எழுதியவர் : ராம் (15-May-14, 3:09 pm)
பார்வை : 102

மேலே