அவள் -
கூந்தல்-
காரிருள் நிறம்
கொண்டிருக்கும்,
காடெனவே
பின் படர்ந்திருக்கும்,
நதியதன் கரையை
தீண்டி ரசிக்கும்,
மல்லிகை மலராய்
வாசம் அளிக்கும்..
நெற்றி-
காடின் எல்லையில் தொடங்கும் நதி,
கரு வில் வரையில் தொடரும் ஜதி,
என் இதழின் ஈரம்
பொட்டாய் மாறும்
பாக்கியம் தந்தது விதி..
புருவம்-
நதியின் கரையில், நீண்டு நின்றிடும்
கொஞ்சி பேசையில், ஒன்று சேர்ந்திடும்
கோபம் வருவதை, காட்டிக்கொடுத்திடும்
ஏழு நிறமதில், எட்டாய் சேர்ந்திடும்..
கண்கள்-
வெள்ளை பூக்கள் இரண்டிருக்கும்,
வண்டிற்கும் உள் இடமிருக்கும்,
காதல் செய்யும் இருவருக்கும்,
கையில் வாளோடு, காவலிருக்கும்..
காது-
ஒ வின் வடிவை
முழுமையாய் பெற்ற
அற்புத அழகிகள் இருவரும்..
அதை கட்டி அணைத்திட
கட்டில் அடங்காத
கூந்தல் இறங்கிடும் தினம் தினம்..
மூக்கு-
இரு துழைகள் கொண்ட புல்லாங்குழல்,
காற்றை, வாசம் செய்யும் மாயக்குழல்..
அதன் நுனியில் தோன்றும் கோபக்கனல்..
பயம் வேண்டாம்
அது வெறும்
பாலை காணல்..
இதழ்கள்-
இரு வரிக் குறளவை,
கவிஞ்ஞனின் மொழியவை..
புதியதோர் கனியவை,
புன்னகை செய்பவை..
தேனதன் கூடவை,
தெவிட்டாத சுவையவை..
அனுதினம் பருகியும்,
அலுக்காத நீரவை..
கன்னம்-
மேகம் மெல்ல கீழ் இறங்கையில்
கன்னம் ஆனதே,
விரல் பட்டால், இரேகை
பதியும் என்றென்
உதடுகள் சிரிக்குதே..
பறக்கும் விண்மீன் பூமி சேர்கையில்
பருக்கள் ஆனதே,
அவள் பருவம் வந்ததை
காடிக்கொடுத்திட
பகலிலும் ஒளிருதே..
கழுத்து-
பாற்கடலின் முத்தை இடித்து,
கோஹினூரின் வைரம் அரைத்து,
அரபு நாட்டின் அத்தர் கலந்து,
மெதுவாய், இதமாய் செய்தது
மின்னும் கழுத்து..
பெண் தமிழ் என்றால்
அது ழ என்னும்
பொன் எழுத்து..
கை-
மயில் தோகை
தோளோடு சேர்ந்து
கை என்று
பொய் சொல்லுதே,
நிறம் எல்லாம்
தனியாக நின்று
விரல் என்று
விளையாடுதே..
நகம்-
வளர்பிறை இறங்கி
விரலில் கிடக்கும்..
வெட்டி வீழ்த்தினால்
மீண்டும் முளைக்கும்..
கூரது எதிரியின்
தேகம் கிழிக்கும்..
நான் அள்ளி அணைத்தால்
கவிதை கிறுக்கும்..
மார்பு-
அழகின் கர்வம்
அவை தான் இரண்டும்..
இச்சிகரம் முன்னே
இமயம் அடங்கும்..
வியர்வை சுரப்பி
தேனை கொடுக்கும்..
பிள்ளை பெற்றால்
அமுதம் சுரக்கும்..
இடை-
மலரதன் இதழ்களின்
திடம் அதிகம்,
அவள் மெல்லிய
இடையுடன் ஒப்பிட்டால்..
அவ்விடையதன்
சுவையது மிக அதிகம்,
முக்கனியதன் சுவையுடன்
ஒப்பிட்டால்..
பின்னழகு-
தாமரை மலரது கவிழ்ந்திருக்கும்,
இடையதன் கீழே பூத்திருக்கும்,
படைத்தவன் வள்ளல் என்பதற்கு,
சிறந்தொரு சான்றாய்,
அவை இருக்கும்..
கால்-
தாமரை மலர் தண்டு,
ஈறைந்தென இதழ் கொண்டு,
நீரிருந்து வெளியே வந்தும்,
வாடிடாத வண்ணச்செண்டு..
பாதம்-
மலர் தாங்கும்
இலையதைப்போலே
உனை தாங்கும்
சிறு பாதமே...
உனை தாங்கும்
பாதம், மண் மீதா..?
வேண்டாம், என்
மெய்யுள்ளதே.....!!