மறக்க நினைத்த
மறக்க நினைத்த கனவுகள்
மனசின் ஆழத்தில் சுவடுகளாய்!
கிழித்தெறிந்த ஓவியங்கள்
மண்மீது தனித்தனி உருவங்களாய்!
அன்பே!
நன் எங்கு சென்றாலும்
ஏனடி உன் நினைவுகள்
என்னை
நிழலாய்த் தொடர்கின்றன?
மாலைக் குளிரினிலே
மனசெல்லாம் வியர்க்குதடி...
நடுப்பகல் வேளையிலே
நெஞ்சம் நடுங்குதடி...
இனியவளே!
உன் பார்வைகளின் தூறல்கள்
தென்றல் காற்றுக்களா-
இல்லை
தீயுமிழும் சூரியக் கதிர்களா?
நான்
வனைந்து வைத்த கலசங்கள்
நனைந்து சேறாய் உருகின-
பிணையாத களிமண்ணோ
என் முன்னே சிற்பங்களாய்!
இனியவளே!
உன் பார்வைகளின் சாரல்கள்
தென்றல் காற்றுக்களா-
இல்லை
தீயுமிழும் சூரியக் கதிர்களா?