என்னவனுக்காக

உன்னை என்னுள்
ஏற்றுக்கொண்டு உனக்காக
வாழ்கிறேன் – நித்தம்
உன் நினைவில்
உயிர் வாழ்கிறேன்..

எத்தனை பிறவியெடுத்தாலும்
அத்தனை உயிர்ப்பிலும்
உன்னோடு உனக்காக
உயிராய் வாழவேண்டும்..

இனியவன் என்னவனின் கண்ணை
இமை கொட்டாமல் பார்க்கும்
இன்பம் போதும்- எனது
இவ்வுலக வாழ்வு அர்த்தம்பெறும்..

எழுதியவர் : மகேஸ்வரி வெள்ளிங்கிரி (15-May-14, 5:11 pm)
பார்வை : 2582

மேலே