வசந்தம் வருமா
..."" வசந்தம் வருமா?? ""...
வாசல் வந்த தென்றல் என்
வாழ்க்கையில் வரவில்லை
எட்டியே தள்ளி நின்று
என்னை மெல்ல தட்டிசெல்ல
எதுவும் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
விடியளில்லா இரவும்
வெளிச்சமில்ல பகலும்
விழிகள் திறக்கும் முன்னே
இருண்டுவிட்ட உலகம்
இரண்டற கலைந்த பின்னும்
எண்ணையோடு தண்ணீராய்
அம்பென துளைத்திடும்
அன்பான வார்த்தைகளால்
உண்டான வேதனையிலும்
நல்லதொரு வேடிக்கையே
வெறுக்க தெரியாததால்
அருந்துகொண்டு செல்ல
அனுதினமும் அடிமனதை
அரளி விதையென உயிர்குடிக்க
குருதி உறைந்து தேகம் குளிர்ந்து
உயிரோடு நானும் உலவுகிறேன்
எனக்கு எதுவும் தெரியவில்லை
இங்கு ஒன்றும் புரியவில்லை,,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...