கல்லூரி வாசல்

கல்லூரி வாசல். ....


மூன்று வருடமும்
முப்பது நிமிடமாய்
கழிந்ததடி. ..பெண்ணே உன்
முகம் பார்த்த பின்னே!

அன்பே!
உன் விழி தீண்டிடும்
அந்த சில நொடிகளில். ..
என்னிதயம் சுவாசமின்றி தடுமாறும்...

உன் சின்னச் சிரிப்பில்
எனக்குள்ளே இறக்கை
முளைக்குதடி....

தினம் தினம் நீ வரும்
திசை நோக்கி தவமிருந்தேன்..உன்
தரிசனத்திற்காக. ...

நீ போடும் 'சல்வார்'...
நீ வைக்கும் 'ஸ்டிக்கர்'...
நீ பூசும் 'லிப்ஸ்டிக்'....
உன் தோள் உரசிடும் 'கைப்பை'
உன் கைக்குள் சிரித்திடும் 'செல்போன்'
எல்லாமே ரசித்தேன்.....

கண்ணாடி முன்னின்றால்...
கண்ணெதிரே உன் பிம்பம்
மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

பெண்ணே!
கடைசியாய் ஒரு நிமிடமாவது
என்னிடம் பேசிவிட்டு செல்லேன்
அடுத்த நிமிடம் நான்
மரணிக்கவும் தயார்......

எழுதியவர் : நிஷா (16-May-14, 1:38 pm)
Tanglish : kalluuri vaasal
பார்வை : 123

மேலே