கொழுத்தவன் பேச்சு இளைத்தவனிடம் வெளுத்துப் போச்சு

எட்டுகாலு பூச்சிஒன்னு
கட்டிவச்ச கோட்டைக்குள்ளே
எக்காளம் விட்டுச்சாம்
என்கோட்டைக்குள்ள நானே ராஜாவென
எட்டிப்போகமுடியாம
மாட்டி தவிக்கும் உயிரைத்தின்னு
கொலு கொழுன்னு கொளுத்து
உடல் பெருத்து பழுத்துச்சாம்
வலையருந்து போனதொருநாள்
வலைப்பின்ன முடியமால்
தீனி உண்ணமுடியாமல்
கலங்கி நிற்கும் காலம் வந்துச்சாம்
வலுவிழந்த எறும்பும் கூடி
கொளுத்த பூச்சியை
கூடிப் பிரித்து உண்ணுச்சாம்.

நீதி :(வலுத்தவன் கர்வம் கொண்டு கொக்கரித்தால் இளைத்தவனுக்கும் காலம்வரும்) .

எழுதியவர் : கனகரத்தினம் (16-May-14, 1:24 pm)
பார்வை : 108

மேலே