சிறப்புக்கவிதை 63 தீபக் பாஸ்கர் --எங்கள் பழையவை

அழகழகாய்,
மூன்று அறையோடு
குட்டி வரிசை வீடு;
மழை வந்தால்,
உள்ளனுப்பும்
நவீன கூரை ஓடு;
பஞ்சு மெத்தையை
கண்டோமே நாம்
கிழிந்த பாயினோடு.

ஒற்றை ரூபாயில்
பத்து மிட்டாய் வாங்கிடுவோம்;
ஒற்றை மிட்டாய் என்றால் கூட
மூன்றாய் பிரித்திடுவோம்.

பெட்டிக்கடையின்
டீ கேக்கில்;
மெழுகுவர்த்தியின் மாநாட்டில்;
பிறந்த நாள் பல கடந்ததுண்டு;
பணம் இல்லையென்பதை
மறந்ததுண்டு.
நான்கு மணிக்கே எழுந்திடுவோம்;
படிப்பதாய் சொல்லி
அமர்ந்திடுவோம்;
தூங்கி விழுந்து, மாட்டிக்கொண்டால்
மனப்பாடம் செய்வதாய்
புழுகிடுவோம்.

விவரம் அறியா அவ்வயதில்;
விடைத்தாள் வருமோ என பயந்து;
விடியற்காலை விழுத்திடுவோம்;
தெருவின், தொந்தி தோழனை தொழுதிடுவோம்.

கூட்டாஞ்சோறும், கேசரியும்
பறித்துத்தின்றக் கொய்யாவும்;
இன்னும் இன்னும் இனிக்குதடி
நினைத்தாலே நெஞ்சம் சுவைக்குதடி.

புதுமைகள் நம்மை அனைத்தாலும்
பழயதை நெஞ்சம் மறக்காது;
ஜோடிகள் உடன் சேர்ந்தாலும்
இடைவெளி நம்மில் இருக்காது.

எழுதியவர் : தீபக் பாஸ்கர் (16-May-14, 8:58 am)
பார்வை : 87

மேலே