இத்தனையும் வந்தது காதலால்

எத்தனை வேகமாய் போகிறது என் மனம்...

நீ போ போ என்று
துரத்தும் போதெல்லாம்
போகிறது என் மனம்

உன்னையே தேடி!
.................................

இத்தனை வெறுப்பு தான் எதற்கு?

நீ பிடிக்கவில்லை என்று
வெறுக்கும் போதெல்லாம்
என்னையே பிடிக்காமல் போனது எனக்கு

உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது என்பதால்!
.................................


என்ன கோவம் கொண்டேன் என் மேல்?

நீ கோவப்பட்டு
திட்டிச் சென்ற போதெல்லாம்
எனக்கு கோவம் வந்தது என் மேல் தான்

ஏன் உன்னை கோவம் கொள்ள வைத்தேன் என்று!
.................................


எப்படி பிரிந்தது என் உயிர்?

நீ விலகி போ என்று
சொன்ன போதெல்லாம்
விலகி போனது என் உயிர்

என்னை விட்டு!
.................................


இத்தனையும் எனக்குள் வந்தது ஏன்?

எனக்கு உன் மேல் வந்த காதலால்...!
....................................................................



இந்திரா...

எழுதியவர் : இந்திரா (16-May-14, 4:59 pm)
பார்வை : 110

மேலே