கேசியா ஹெர்பல்ஸ்
வேதாஸ் இண்டஸ்ட்ரிஸ் எனது சொந்த ஊர் திருகோளாக்குடி கிராமம்,திருப்பத்தூர் தாலுக்கா,சிவகங்கை மாவட்டம்.எங்களது குடும்பம் மிகவும் எளிமையானது. என் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரன்,ஒரு சகோதரி. நாங்கள் மூவரும் எங்களது கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் சிறு வயது மற்றும் மேல் நிலை பள்ளி படிப்பை முடித்தோம். ஒரு நடுத்தர கல்லூரியில்,கல்லூரி படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தோம்.
நான் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பத்து வருடமாக பணியாற்றி வந்தேன். நல்ல வேலை,நல்ல ஊதியம். இருந்தபோதும் வேலை நெருக்கடி,மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்பட்டது. இது எனக்கு மிகவும் கவலையை தந்தது. இந்த பிரச்சினைக்கு நான் பலவிதமான பொருட்களையும்(treatment) உபயோகித்தேன். எந்த பலனும் இல்லை.இந்த பிரச்சினையை எனது அம்மாவிடம் தெரிவித்தபோது, அம்மா எனக்கு கிராமங்களில் கிடைக்கும் ஆவாரை இலையை அரைத்து,பொடியாக்கி எனக்கு தந்தார். அதை பயன்படுத்தியதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினை மூன்று வாரங்களில் மெதுவாக குறைய தொடங்கியது. இரண்டு மாதங்களில் முடி உதிர்வு முற்றிலும் குறைந்தது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சி அதிகரித்தது.
இப்படியே சில வாரங்கள் கழிந்தது. எனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை இருந்தது. நான் அவர்களுக்கு நான் பயன்படுத்திய மூலிகை மருந்தை
பரிசிளித்தேன். அவர்களும் இதை வழக்கமாக உபயோகப்படுத்தியதன் விளைவாக அவர்களுக்கும் முடி உதிர்வு நாளடைவில் குறைய தொடங்கி,முடி வளர்ச்சி மெதுவாக அதிகரித்தது.
அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது இயற்கையின் மூலம் எதையும் செய்ய முடியும் என்று.
என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவம்:
எனது நண்பன் புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தான். மருத்துவரின் முயற்சினால் கூட அவனை காப்பாற்ற முடியவில்லை . அப்போது அந்த மருத்துவர் என்னிடம் சொன்னார், வளர்ந்து வரும் நவீன உலகில் மனிதன் பல வேதிப்பொருட்களையும்,வேதி கலவைகளையும் தான் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்துகிறான். அதன் விளைவாக அவனது உடல் ஒரு வேதிப்பொருட்களின் கலவையாக மாறிவிடுகிறது. வேதி பொருட்கள் என்றைக்கும் நம்மை அழிவு பாதைக்குத்தான் அழைத்து செல்லும் என்றார்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் வேதி பொருட்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
மாற்றி யோசித்து பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையையே மாறிவிடும்.
வேதிப்பொருட்களுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை,ஏன் இயற்கைக்கு அளிக்க மறுக்கிறோம். இயற்கையின் முக்கியத்துவத்தை நாம் ஏன் ஏற்க்க மறுக்கிறோம்.
இதன் காரணமாகத்தான் மக்களுக்கு இயற்கையின் நன்மைகளை அளிக்க வேண்டும் என்றும்,மக்களின் முடி உதிர்வு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் உருவாக்கப்பட்டது தான் "கேசியா ஹெர்பல்".
இயற்கை நம்மை சுற்றிலும் உள்ளது. நாம் அதை முறையாக பயன்படுத்தினாலே நமது வாழ்நாளும்,வருங்காலமும் வளமாக அமையும்.
எங்களது குறிக்கோள்,மக்களுக்கு எங்களால் இயன்ற அளவு உதவிகளையும்,வழிகளையும் வழங்க வேண்டும் என்பதுதான்.
நாங்கள் ஆரம்பகாலத்தில் பல நெருக்கடிகளையும்,தோல்விகளையும் சந்தித்தாலும்,தோல்விகளை கண்டு அஞ்சாமல் எங்களது முயற்சியை சற்றும் கைவிடாமல் மக்களுக்கு ஒரு மாற்றத்தை அளிக்க வேண்டும்,மக்களுக்கு உதவ வேண்டும்,இயற்கையின் மூலம் அவர்கள் பயன் அடைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம்.
குன்றக்குடியில் உள்ள KRISHI VIGYAN KENDRA இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் பணிபுரியும் டாக்டர். திரு. செந்தூர் குமரன் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாகவும், எல்லா வித உதவிகளையும் எந்த நேரத்திலும் எங்களுக்கு வழங்கியமைக்கு அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களது தயாரிப்புகள் அனைத்தும் ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தரம்
பரிசோதிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
தயாரிப்புகள்:
1.மூலிகை கூந்தல் பொடி
2.ஆவாரை கூந்தல் பொடி
ஆவாரை பயன்கள்:
1.இதனுடைய தூள் முடிக்கு எந்தவித பாதிப்பும் அளிக்காமல் முடியின் வேறுக்கு ஊட்டத்தை அளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
2..நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
3.ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும்.
4.உடல் சூட்டை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிரது.
5.இதனுடைய தூள் முடிக்கு எந்தவித பாதிப்பும் அளிக்காமல் முடியின் வேறுக்கு ஊட்டத்தை அளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
செம்பருத்தின் பயன்கள்:
1.இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
2.இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
.3.சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
4.இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
மருதாணி பயன்கள்:
1.மருதாணி இலைகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.
2.மருதாணி முடி சாயங்கள், ஒப்பனை மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
3.மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
4.இதன் தைலம் முடியை வளர்க்கும்,இள நரையை அகற்றும்.
5.நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.
வேம்பு:
1.வேப்பம் இலைகள், சின்னம்மை சிகிச்சைக்கு பயன்படுகிறது
2.ஒப்பனை செய்ய பயன்படுத்தப்படுகிறது
3.வேம்பு ஒரு உரமாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
4.வேம்பு ஒரு அழகு உதவியாக இந்தியாவில் கருதப்படுகிறது.
கருவேப்பிலை:
1.உணவில் நறுமண பொருளாக பயன்படுகிறது.
2.இலைகள் முடி வேரின் வலிமையை அதிகரிக்கிறது.
3.சிறந்த இயற்கை எதிர்ப்பு ஆக்சிஜனேற்றியாக செயல்பட்டு புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெட்டிவேர்:
1.முடி வளர்ச்சியை தூண்டும்.
2.இதன் வேர் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது.
3.வெட்டி வேர் நறுமண எண்ணெய்கள் செய்யவும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
ரோஜா இதழ்:
1.முடியின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
2. முடி உதிர்வை தடுக்கிறது.
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ".
உதிர்வது முடியல்ல உங்கள் புன்னகையும் தான்.
"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்,
ஏன் கையை ஏந்த வேண்டும் அமேசான் காட்டில்".
"கூந்தலை பராமரிக்க ஈசியா
கடைக்கு போய் வாங்குங்க கேசியா."
எங்களது இந்த முயற்சியை தமிழ்நாடு,இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் எடுத்து செல்லும் முயற்சியிலும் நாங்கள் ஈடுப்பட்டுள்ளோம்..
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
என்ற வாக்கிற்க்கு இணங்க ,படித்த தமிழ் இளைஞர்களால் மக்களின் முடி உதிர்வு தொல்லையை போக்க உருவாக்கப்பட்டது தான் எங்களது கேசியா ஹெர்பல் நிறுவனம்.
"இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி"
"நாம் தாய் திருநாட்டு மக்களுக்கும்,தாய் நாட்டிற்க்கும் எங்களால் இயன்ற உதவிகளை புரிவோம்
தாய் திருநாட்டின் மதிப்பை உயர்த்துவோம்".
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
